search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏ ஆர் முருகதாஸ்"

    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
    • சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸ் ஒருவராக இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குநராக ஆரம்ப காலத்தில் பணி புரிந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் அஜித் நடித்து வெளியான தீனா என்ற படத்தை இயக்கினார்.

    2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கஜினி படம் ஹிட்டானதை அடுத்து 2008 ஆம் ஆண்டு அவரின் திரையுலக பயணத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார்.

    இவர் இயக்கிய கஜினி படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். இந்தியிலும் மிக முக்கியமான படமாக இது பேசப்பட்டது. வசூலில் உச்சமடித்தது இந்தி கஜினி. மேலும் வசூலில் ரூ. 100 கோடி தாண்டிய முதல் இந்தி படம் இதுவே.

    2011 ஆம் ஆண்டு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 7ஆம் அறிவு படத்தை அவர் இயக்கினார். 2012 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கினார். நடிகர் விஜய்-க்கு கம்பேக் கொடுத்த படங்களில் துப்பாக்கி முதன்மை இடம் பிடித்தது.

    தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் துப்பாக்கி இடம் பிடித்தது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சர்கார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார்.

    இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.இது சிவகார்த்திகேயனின் 23-வது படம் ஆகும். இந்த படம் தொடர்பான தவவல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். இவர் இயக்க போகும் இந்தி படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் சல்மான் கான் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.
    • இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பின்னர் விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.


    இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். இதனை சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

    மேலும், "எனது 23-வது படத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா விதத்திலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


    சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் அரசியல் பேச்சுக்கு, “சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள்” என அமைச்சர் உதயகுமார் பதில் கொடுத்துள்ளார். #Vijay #Udhayakumar #Sarkar
    மதுரை:

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்’ என்று அதிரடியாகப் பேசினார். மேலும் ‘எல்லாரும் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம்’ என்றார் . 



    விஜயின் இந்த பேச்சு அரசியல் களத்தை பரபரபாக்கியுள்ள நிலையில், பல அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும்நிலையில், அமைச்சர் உதயகுமார்,  ‘சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள். திருவிழாவுக்கு வருவோரெல்லாம், சாமியாக முடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள்.’ என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
    ×